
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசிய கிண்ண வெற்றி, அவுஸ்திரேலிய தொடரை கைப்பற்றியது என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து உற்சாகத்தோடு களமிறங்குகிறது இந்திய அணி.
இந்திய அணியை பொருத்தவரை துடுப்பாட்டம், பந்து வீச்சி, களத்தடுப்பு என அனைத்திலும் சிறப்பாக இருப்பதுடன் முதலாம் இடத்திலும் உள்ளது.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு நாட்களாக வலைபயிற்சிக்கு வரவில்லை அத்துடன் மருத்துவ கண்கானிப்பில் இருப்பதால் அவருக்கு பதிலாக இஷாந்த் கிஷனை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.