
எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை யார் வழிநடத்துவது என்பது குறித்து மூத்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக இருக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை தசுன் ஷானக ஏற்று அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதாக மலிங்க கூறியுள்ளார்.
அவரது அமைதியான குணம் அணிக்கு அவசியம் என லசித் மலிங்க தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறுகையில், தசுன் ஷானக தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாகவும், அதற்காக அவர் தள்ளப்பட மாட்டார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தசுன் ஷானக சிறந்த நபர் என்றும் அவர் ஒரு நல்ல தலைவர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ள (Whatsapp Channel) whatsapp சேனலில் Onlanka எமது சேனலை Follow செய்யுங்கள்.
Link கீழே👇👇👇
Follow the Onlanka channel on WhatsApp: