
2023 ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 357 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
நேற்றைய தினம் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், 24.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்ததால் போட்டி இன்றைய தினத்திற்கு நடுவர்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை 4.40 மணியளவில் போட்டி ஆரம்பமானது.
இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராஹுல் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி சிறந்த இணைப்பாட்டத்தை வௌிப்படுத்தியிருந்தனர்.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 356 ஓட்டங்களைப் பெற்றது.
ஆட்டமிழக்காமல் அதிரடி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கோஹ்லி மற்றும் ராஹுல் தலா 122 மற்றும் 111 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும், இந்த போட்டியில் 98 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விராட் கோஹ்லி சாதனை படைத்தார்.
அதன்படி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோஹ்லி 13,024 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அணித்தலைவர் ரோஹிட் சர்மா 56 ஓட்டங்களையும், சுப்மன் கில் 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஹா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.