
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, C மற்றும் D Upper Block பிரிவின் டிக்கெட் கட்டணம் 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், C மற்றும் D Lower Block பிரிவுக்கான டிக்கெட் கட்டணம் 500 ரூபாய் ஆகும்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இந்தியா-பாகிஸ்தான் போட்டி உட்பட அனைத்து சூப்பர் 4 போட்டிகளுக்கும் இந்த விலை குறைப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, வித்யா மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள கவுன்டரில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யலாம்.
ஒன்லைன் டிக்கெட்டுகளை http://pcb.bookme.pk இலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.