அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் அடிப்படையில், 2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கும்,விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது தொடர்பில் மேலதிக தீர்மானங்களை எடுப்பதற்கும்,சுகாதார அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.