மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 52.61 விநாடிகளில் கடந்து இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். மேலும் வெள்ளிப்பதக்கத்தை உஸ்பெகிஸ்தானும் வெண்கலப்பதக்கத்தை இந்தியாவும் வென்றன.
இதேவேளை, பிரான்ஸின் பாரிஸில் நடைபெறும் பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையை சேர்ந்த சமித்த துலான் 64.06 மீட்டருக்கு எரிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.