திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தற்போது மாதமொன்றுக்கு,
13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கின்றார்.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 03 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்காக குறித்த 13 இலட்சத்தை உற்பத்தி செய்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சந்தைக்கு தேவையான சோளத்தை உற்பத்தி செய்வதில் நாம் இன்னும் வெற்றிபெறவில்லை.
கொரோனா வைரஸின் போது கூட நாங்கள் திரிபோஷா நிறுவனத்தை மூடவில்லை.
மேலும், நமக்குத் தேவையான சோளம் சரியான அளவு கிடைத்தால், தொடர்ந்து 20 நாட்களுக்கு 19 லட்சம் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்யலாம் என,
திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.