246 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (17) நடைபெறுகிறது.

தர்மசாலா மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் Lungi Ngidi, Marco Jansen, Kagiso Rabada தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

நெதர்லாந்து அணி சார்பில் Scott Edwards 78 அதிகப்பட்ச ஓட்டங்களாக பெற்றார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 246 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *