வியட்நாமில் கனமழை

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில் மீட்பு படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *