2023 உலகக்கிண்ண ரக்பி தொடர் இன்று இரவு பிரான்ஸில் ஆரம்பம்

2023 உலகக்கிண்ண ரக்பி தொடர் இன்று பிரான்ஸில் ஆரம்பமாகின்றது.
4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் உலகக்கிண்ண ரக்பி தொடர் இவ்வாண்டு 10 ஆவது முறையாக நடத்தப்படுகிறது.
இந்தத் தொடரில் 4 பிரிவுகளின் கீழ் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இன்று நடைபெறவுள்ள தொடரின் முதலாவது போட்டியில் பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இலங்கை நேரப்படி இரவு 12:45 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
2023 உலகக்கிண்ண ரக்பி தொடரை இலங்கையில் ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்றுள்ள TV 1 தொலைக்காட்சியில் இந்தப் போட்டியை நேரலையாகக் கண்டுகளிக்க முடியும்.
தொடரின் அனைத்து போட்டிகளினதும் நேரலையையும், மறு ஔிபரப்பையும் 7 வாரங்களுக்குக் கண்டுகளிக்கக்கூடிய வாய்ப்பை MTV தனியார் நிறுவனம் இலங்கை ரசிகர்களுக்கு வழங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *