மழையுடனான வானிலையுடன் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சற்று உயர்வடைந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையத்தை அண்மித்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 26.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த மின்சார சபை, நாளாந்த மின் உற்பத்தியில் நீர் மின் உற்பத்தி 26 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
மவுசாகலை மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 41 வீதமாக அதிகரித்துள்ளது.
0.9 வீதமாக காணப்பட்ட சமனல வாவியின் கொள்ளளவு 4.6 வீதமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சமனல வாவியின் நீர் வெளியேறும் பகுதிகளை மூடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூடியளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தெற்கில் மின் தேவையை உறுதிப்படுத்துவதற்காக Ace மாத்தறை மற்றும் Ace எம்பிலிபிட்டிய தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் தொடர்ந்தும் பெறப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்தது.