2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலகக் கிண்ண தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் உலகக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை. துணை தலைவராக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி:-
- ரோகித் சர்மா
- 2. சுப்மன் கில்
- 3. விராட் கோலி
- 4. ஸ்ரேயாஸ் அய்யர்
- 5. ஹர்திக் பாண்ட்யா
- 6. ஜடேஜா
- 7. குல்தீப் யாதவ்
- 8. முகமது சமி
- 9. முகமது சிராஜ்
- 10. பும்ரா
- 11. ஷர்துல் தாகூர்
- 12. சூர்யகுமார் யாதவ்
- 13. இஷான் கிஷன்
- 14. சூர்ய குமார் யாதவ்
- 15. அக்சர் படேல்