சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்!

சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச் செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்துடனான காலநிலை தொடரும் போது, ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உளநலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மருந்துகளை உட்கொள்வோர் இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலப்பகுதியில் அதிகளவு நீரை பருகுவது அத்தியாவசியமாகும்.

உடலில் நீரின் அளவு குறையுமிடத்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் எனவே, அனைத்து தரப்பினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமானதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *