விசக்கலவையுடனான நீரை பருகிய மாணவர்கள் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்றைய தினம் நாராம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளனர்.10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே தரத்தில் கல்வி கற்கும் சக மாணவிகளுடன்,குரோதமடைந்தமையினால் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷத்தை கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாராம்மல காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.