பிரித்தானியாவில் போலி ஆவணங்கள் தாயரித்து கோடிஸ்வரரான இலங்கைத் தமிழர்

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் ஆவணங்கள் தயாரித்து கோடிஸ்வரரான இலங்கை தமிழர் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் புகலிடம் கோருவதற்கு போலியாக சட்ட ஆலோசனை வழங்குவதற்கு 10,000 பவுண்டுகள் வரை அறவிடப்படுவதாக ஆதாரங்களுடன் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

கோடிக்கணக்கான பவுண்டுகளுடன் ராஜபோக வாழ்க்கை வாழும் லிங்கஜோதி என்ற இலங்கையர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

1983ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரித்தானியா வந்த லிங்கஜோதி தற்போது மிகப்பெரிய பணக்காரராகியுள்ளார்.

சிறப்பு இலக்க தகடு கொண்ட BMW கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவர் குடிவரவு அதிகாரிகளிடம் போலிக் கதைகளை கூறுபவர்களிடம் நெருக்கமாகுவதாக தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு அகதி தஞ்சம் பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறிகின்றார். உதவி செய்யவில்லை என்றால் தன்னால் நிம்மதியாக வாழ முடியாதென கூறுவதுடன், அதற்காக 10,000 பவுண்டுகள் வரை கட்டணம் அறவிட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெய்லி மெயில் செய்தி சேவை நிரூபர்கள் மாற்றுவேடத்தில் லிங்கஜோதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் தங்குவதற்கு உதவ என்ன செய்ய முடியும் என லிங்கஜோதியிடம் கேட்டபோது, அவர் உடனடியாக சித்திரவதை, தாக்குதல், அடிமை வேலை, பொய்யான சிறைவாசம் மற்றும் மரண அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய முற்றிலும் கற்பனையான கதைகளை கூற வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *