நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்…!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில்,பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *