வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி சுமார் மூன்று கோடி ரூபாவை மோசடி செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் தொடர்பில் நுகேகொட விசேட புலனாய்வுப் பிரிவினருக்கும் மாலபே பொலிஸ் நிலையத்துக்கும் கிடைக்கப்பெற்ற 26 முறைப்பாடுகள் குறித்து,மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மாலபே பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வீடுகளை நிர்மாணித்து தருவதாகக் கூறி மக்களிடம் 34,375,000 ரூபா பணத்தை மோசடிசெய்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் இன்று (24) கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.