இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான தற்போதைய வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.