2022 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,குறித்த திகதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.