கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரையை பார்வையிட இரண்டு நாட்களுக்குள் மூவாயிரம் பேர் வந்துள்ளனர்.இந்த செயற்கை கடற்கரையை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரை விளையாட்டுகள், நீர் விளையாட்டுகள், உணவகங்கள்,மற்றும் வணிக வளாகங்களில் சுற்றுலாவில் ஈடுபடும் வகையில் சேவைகளின் வலையமைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக நகர அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.