” முஸ்லிம்” என்ற பதத்தை நீக்கிய சட்டமூலத்திற்கு ரவூப் ஹக்கீம் ஆதரவா? ஏன் கையொப்பம் இடவில்லை?

நீதியமைச்சினால் சமர்க்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பிலான சட்டமூலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை முன்மொழிந்து 18 முஸ்லிம் பாராளும்னற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும், அதற்கு அமைச்சர் அலி சப்ரி மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கையொப்பம் இடவில்லை என சட்ட்த்தரணி நுஸ்ரா சறூக் யூடிவிக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்தார்,

இது தொடர்பில் அவர் மேலும், கருத்து தெரிவிக்கையில்,

நிதியமைச்சினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தில் அனைத்து திருத்துங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, முஸ்லிம் சமூகத்திற்கு பாதகான பல அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்களை கொண்டுவர ஜம்மியதுல் உலமா சபையின் ஆலோசனையில் திருத்தங்களை மேற்கொண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நீதியமைச்சர் விஜயதாச ராகபக்‌ஷக்கு கையளிக்கப்பட்டுள்ளது, அதில் முஸ்லிம் கட்சியின் தலைவர் என சொல்லக்கூடிய ரவூப் ஹக்கீம் கையொப்பம் இடாமை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளதாக் சட்ட்த்தரணி நுஸ்ரா சறூக் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *