
மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கும் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் இடையில் மகாவலி கங்கையை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பானபொறியாளர் டயஸ் அறிவுறுத்தியுள்ளார்.