நீருக்கடியில் போட்டி – பரிதாபமாக பறிபோன உயிர்

பாதுக்கை மாவத்தகம பிரதேசத்தில் நீர் நிரம்பிய குழி ஒன்றில் நீருக்கடியில் போட்டியொன்றை நடத்தியவர்களுக்கிடையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பாதுக்கை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று மது அருந்திவிட்டு அந்தந்த நீர் நிரம்பிய குழியில் நீராடி கொண்டிருந்த  போது அதிக நேரம் நீருக்கடியில் மூச்சை இழுத்து பிடிக்க கூடிய நபரை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

அந்த போட்டியின் போது, ​​மூச்சு இழுத்து பிடித்து  தண்ணீருக்குள் சென்ற ஒருவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் மேற்பரப்பிற்கு வராததால், ஏனையவர்கள் அவரை மீட்டுள்ளனர்.

பின்னர் ​​குறித்த நபரை உடனடியாக பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 துன்னானை பகுதியைச் 47 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பாதுக்கை மரண பரிசோதகர் கலாநிதி நந்தசேன பன்னிபிட்டிய நடத்த உள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஜா-எல யக்கடுவ பகுதியில்  நீரில் மூழ்கியிருந்த பகுதியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் கடும் மழை காரணமாக நீர் நிறைந்திருந்த பகுதியில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ, பதலகொட ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் துடுவாவல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடி கடற்படையினரின் உதவியுடன் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://onlanka.lk/local-news/2946/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *