டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம்

🔊டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

🔊பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

🔊இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

🔊உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

🔊ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது. இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமாளவில் வெளியிடப்படும்.

🔊இதேவேளை பாடசாலை விடுமுறை இம்முறை டிசம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்” என்றார்.

https://onlanka.lk/local-news/2896/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *