கடத்தப்பட்டு 5,000 நாட்கள்; ஆர்ப்பாட்டம்

வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கான நீதிக்கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மட்டக்களப்பில் முன்னெடுத்துள்ளனர்.

இன்று (04) பகல் 12.00 மணியளவில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் தூபிக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னலி கொடவிற்கான சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு சர்வதேச விசாரணை கூறுகின்றனர். ஆனால் கடத்தியும் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை பொறிமுறை ஒன்று இலங்கையில் இதுவரையில் நேர்த்தியாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இதற்கான ஒரு சர்வதேச பொறிமுறை மூலமாக ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் கடத்தப்பட்டு அக்கரைப்பற்றில் அவரது இறுதி மூச்சு நிறுத்தப்பட்டுள்ளதாக அவருடைய துணைவி சந்தியா எக்னலிகொட கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக அக்கரைப்பற்றில் உள்ள ஒரு காளி கோயிலில் ஒரு விசேட பூசையினை நடத்தி இருந்தார்.

தனது கணவனை தேடி இன்றுடன் 5000 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவருக்கான ஒரு நீதியான விசாரணையோ அல்லது சர்வதேச விசாரணை இன்று வரைக்கும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://onlanka.lk/local-news/2885/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *