நுவரெலியாவுக்கு இந்தியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியிலிருந்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நுவரெலியாவுக்கு சென்றிருந்த 88 பேர் கொண்ட குழுவில் வந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இந்தியா குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியை சேர்ந்த ஷான் விஜயகுமார் ஜம்பக்லால் பாஸ்போர்ட் இலக்கம் V 0605652 என்பவராவார் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இந்தியா குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியை சேர்ந்தவர் ஷான் விஜயகுமார் ஜம்பக்லால். அவருடைய மனைவி ஷான் ஜேத்தனா விஜயகுமார்.இவ் இருவரும் 88 பேர் அடங்கிய குழுவாக கடந்த 25.09.2023 அன்று இலங்கைக்கு சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு கொழும்புக்கு வந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்தவர்கள் கொழும்பில் பல இடங்களுக்கு விஜயத்தை மேற்கொண்ட பின் கண்டிக்கு வருகை தந்தவர்கள் பின் 29.09.2023 அன்று நுவரெலியாவுக்கு வருகை தந்து அரலிய சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது ஷான் விஜயகுமார் ஜம்பக்லாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த ஷான் விஜயகுமார் ஜம்பக்லாலின் உடல் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த ஷான் விஜயகுமார் ஜம்பக்லாலின் உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என அவரின் மனைவி விடுத்த கோரிக்கைக்கு அமைய உடலை அவரின் மனைவியிடம் நேற்று அன்று ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://onlanka.lk/cinema-news/2829/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *