சிறு கோள்களின் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவந்த விண்கலம்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) அனுப்பிய Osiris-Rex விண்கலம் இன்று (24 ) உட்டா (Utah) மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன்பு அது விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறு கோள்களின் ஆகப்பெரிய மாதிரிகளை அது பூமிக்குக் கொண்டுவந்தது. 

சூரிய மண்டலத்தின் அமைப்பு, பூமி எப்படி மனித வாழ்க்கைக்கு ஏற்புடையானது முதலியவற்றை மேலும் புரிந்துகொள்ள அந்த மாதிரிகள் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

2020ஆம் ஆண்டில் Osiris-Rex விண்கலம், பென்னு (Bennu) எனும் சிறிய கோளிலிருந்து சிறிதளவு தூசியைச் சேகரித்தது.

பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சிறு கோள்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அது உதவும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

The spacecraft that brought samples of asteroids to Earth!

The Osiris-Rex spacecraft sent by the American Space Agency (NASA) has landed today (24) in the desert in the state of Utah.

International news reports that it was launched 7 years ago.

It brought large samples of asteroids back to Earth.

Scientists hope the models will help them better understand the structure of the solar system, how Earth is suitable for human life, and more.

In 2020, the Osiris-Rex spacecraft collected some dust from the dwarf planet Bennu.

The US space agency said it would help detect asteroids that could pose a threat to Earth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *