
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்த தகுதியை பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.