ஆபாச வீடியோவை வெளியிடுவோருக்கு கடும் தண்டனை

நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் குறித்த அமைச்சரவைப் பத்திரம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட, நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த உறவு முறிந்த பின்னர் சிக்கலை ஏற்படுத்துவதற்காக வேறு நபர்கள் பார்வையிடும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதேநேரம் இரண்டாவது முறை அல்லது மீண்டும் மீண்டும் சிக்கும் நபருக்கு தண்டனை மற்றும் அபராதத் தொகை இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *