
2022ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின் போது மிரிஹானாவில் இராணுவத்தினர் பயணித்த பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்திற்கு பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் பயணித்த பஸ்ஸுக்கு தீ வைத்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
மஹியங்கனை புஜாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சனிக்கிழமை (செப். 02) கைது செய்யப்பட்டுள்ளார்.
காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் ஊடாக அடையாளம் காணப்பட்டமை மற்றும் தொலைபேசி வலையமைப்பு தொடர்பான விசாரணைகளை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.(NewsWire)