
மஹரகம பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான கிராமிய வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட சுமார் 110 கோடி ரூபா பணம் காணாமல்போயுள்ளதாக வைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மஹரகம பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு உரிய 11 கிராமிய வங்கிகளில் முப்பத்து மூவாயிரம் வைப்பாளர்கள் 11 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை வைப்புச் செய்துள்ளனர்
இந்த நிலையில் தமது வைப்புத் தொகையை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் மஹரகம பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியுள்ளனர். இதன்போதே குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.