அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான டி.பி. ஜாயா ஞாபகார்த்த 52ஆவது வருட குத்துச்சண்டைப் போட்டி கண்டி, அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் நாளை (2) முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி தொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அஸ்ஹர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் ஏ.எப்.எம். சிராஜ் தலைமையில் நேற்று (31) இடம் பெற்றது.
இந்த போட்டியின் 52 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக ஒரு முஸ்லிம் பாடசாலை போட்டியை ஒழுங்கு செய்திருப்பது முக்கிய அம்சமாகும் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 296 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கம் மேற்கொண்டுள்ளது.