மிருகங்களை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்ட மின்சாரப் பொறியில் சிக்கிய திம்பிரிவெவ பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய தாய் ஒருவர் இன்று (31) உயிரிழந்துள்ளதுடன். இதில் தாயுடன் விபத்தில் சிக்கிய அவரது மகன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொறியை வைத்த குற்றச்சாட்டில் 56 வயதான சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும, மிருகங்களை வேட்டையாடுவதற்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட வயர்களால் இந்த பொறி தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பில் தனமல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்