அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நபர்

தனக்கு சொந்தமான பொருட்களை பக்கத்து வீட்டுக்காரரின் ஆடுகள் சேதப்படுத்தியதால் ஆடுகளின் உரிமையாளரின்  அந்தரங்க உறுப்பை பாதிக்கப்பட்ட நபர் கடித்து குதறியுள்ளார்.  

உத்தரப்பிரதேச மாநிம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் கங்காராம். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவை அவ்வப்போது கங்காராமின் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் , வீட்டிற்குள் நுழைந்த ஆடுகள் விலை மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கங்காராம், பக்கத்து வீட்டுக்காரரான அந்த ஆடுகளின் உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் கீழே தள்ளி விட்டு அவரது அந்தரங்க உறுப்பை கடித்து குதறியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வலியால் துடித்துப்போன ஆடுகளின் உரிமையாளர்,   மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அக்கம் பக்கத்தினர் சேர்த்துள்ளனர். ஆடுகள் அத்துமீறியதால் அதன் உரிமையாளர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *