கொழும்பிற்குள் நுழைந்த ஆட்கொல்லி நோய்

காலி சிறைச்சாலையில் சில கைதிகள் உயிரிழப்பிற்கு காரணமான மெனிங்கோகோகல் பற்றீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை சுகாதார வைத்திய பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே.எம்.குணதிலக்க தெரிவித்தார்.

குறித்த நபர் பணிபுரிந்த இடத்தில் அவருடன் தொடர்புப்பட்ட சுமார் 30 பேர் பரிசோதனை செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு மருந்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ, இந்த பற்றீரியா தொற்றுக்குள்ளான ஒருவர் இருந்தாலும் அவரை இனங்காணுவது மிகவும் அவசியமான ஒரு விடயம் என சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *