மீண்டும் ஜனாதிபதியாக நான் தயார்!

மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“ரிவி தெரண” வில் ஒளிபரப்பான 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,  சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே வென்ற ஒரே ஜனாதிபதி தாம் என்று கூறினார்.

“எந்த அரசியல் கட்சியிலும் வெட்டினால் நீலம், வெட்டினால் பச்சை, வெட்டினால் சிவப்பு என்று சொல்பவர்கள் இல்லை. இன்று தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அரசு ஊழியர் மகிழ்ச்சியாக இல்லை, மீனவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, சாதாரண குடிமகன் மகிழ்ச்சியாக இல்லை.  பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.  

இவற்றை தடுப்பதற்கும் மற்றும் மற்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் காண்கிறோம். நாம் அதை செய்ய முடியும். கட்சி என்ற வகையில் அதற்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன. ஜனாதிபதியாக பணியாற்றியவர் என்ற வகையில், அந்த அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக இருப்பதில் எனக்கு சிரமம் இல்லை.  சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு, எனது நல்லாட்சியின் காலம் முழு உலகையும் நான் வென்ற காலம் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் செயற்படும் தகுதி 8ஆவது ஜனாதிபதிக்கும் இல்லை என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

“அதைத்தான் அரசாங்கத்திடம் எழுதி அனுப்பச் சொல்கிறோம். அப்போது எமது பதிலை நாம் அனுப்புவோம். அதனால்தான் பதில் அனுப்பினேன். இதை 7 ஜனாதிபதிகள் செய்யவில்லை என்று சொன்னீர்கள். இம்முறையும் அதைத்தான் செய்கிறார்கள்.  அது நடக்காது என்னுதான் நான் நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *