இந்திய வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. பண்டிகை காலம் என்பதால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விலை உயர்வை தடுக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதி வரியை இந்திய மத்திய அரசு 40% உயர்த்தியது.
உள்நாட்டில் வெங்காய வரத்தை மேம்படுத்தவும், விலை உயர்வை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி உடனடியாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வெங்காய ஏற்றுமதி வரி டிசம்பர் 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் பெரும்பாலும் இந்திய ஏற்றுமதியை நம்பியே உள்ளன.
இதனால், இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.