ரயிலில் பாய்ந்து யுவதி தற்கொலை

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் இன்று (09) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தலவாக்கலை – டயகம பிரதேசத்தில் வசித்து வந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டனில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் 5 வருடங்களாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

அதன்படி, இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் ரயிலில் பாய்ந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியின் சடலம் அவரது காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *