இலங்கை மின்சார சபை தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான துணை மின்சாரத்தை இலங்கை மின்சார சபை வாங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.