கொழும்பில் மாபெரும் போராட்டம்! பிறப்பிக்கப்பட்டது தடை உத்தரவு

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தற்பொழுது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முன்மொழியப்பட்ட அடிமை தொழிலாளர் சட்ட திருத்தங்களை உடன் மீள பெறவும் EPF மற்றும் ETFஐ கொள்ளை அடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் இப்ப போராட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.

இப் போராட்டத்தில் எல்லா தொழிலாளர் சங்கங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் இணைந்து கொண்டு உள்ளவர்கள் கடன் மறு சீரமைப்பு திட்டத்தின் பெயரில் உட்பட தொழிலாளர்களின் பணத்தை திருடுவதை நிறுத்தி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் இன்றைய தினம் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் கொழும்பில் சில விதிகளுக்கு பிரவேசிப்பதை மறுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஒல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி, செத்தம் வீதி என்பனவற்றுள் உட்செல்வதை தடுத்து இந்தத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதங்களை விளைவிக்க வேண்டாம் என்றும் கோட்டை மேலதிக நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *