அங்குருவத்தோட்ட தாய் – சிசு கொலையின் இறுதிச்சடங்கில் மோதல்

அங்குருவத்தோட்ட பகுதியில் படுகொலை செய்யப்பட்ட  தாய் மற்றும் அவரது சிறிய மகளின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை பொலிஸார் கட்டுப்படுத்தியுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல் போயிருந்த தாய் மற்றும் அவரது சிறிய மகளின் சடலங்கள், மூன்று நாட்களுக்குப் பின்னர் இரத்மல்கொட காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் உயிரிழந்தவர்களது உடல்களை அடக்கம் செய்ய தயாராகும் போதே மோதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் தரப்பைச் சேர்ந்த ஒருவர் அந்த பெண்ணின் கணவரை மிரட்டியதால் அங்கிருந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், மோதலை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *