இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மேலும் 328 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று இரவு (20.07.2023) வெளியிடப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் 300 அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த வாரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.