உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாளை (16) இடம்பெறும் மிக முக்கியமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கையை லக்னோவில் எதிர்கொள்கிறது.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 2 லீக் போட்டியில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளன.
மிகுதி போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது என்பதால் நாளைய போட்டி பரபரப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.