ப்ரே வியாட் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற WWE வீரர் ப்ரே வியாட்டின் தந்தையிடம் இருந்து தற்போது ஒரு அழைப்பு வந்தது. எங்கள் WWE உறுப்பினர் ப்ரே வியாட் நெஞ்சுவலியால் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற சோக செய்தியை எங்களுக்கு அவர் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்காக நாங்கள் பிராத்தனை செய்கிறோம்.