இத்தாலிய பெண் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர் 37 வயதுடையவர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை சந்தேக நபர் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணை(25) சந்தேக நபர், பூங்காவிற்கு இழுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சிலர் வருவதை கண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸாரின் விசேட விசாரணைகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது