நவகமுவ – பொமிரிய ரக்ஷபான பிரதேசத்தில் ஆயர் ஒருவரின் இல்லத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பல்லகம சுமன என்ற பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை இன்று (08/08/2023) மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சில பெண்களுடன் பிக்கு தகாத செயல்களில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்களிடம் இருந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த முறைப்பாடுகளை அடுத்து பிக்குவை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சாட்சியங்கள் பெற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல மாவட்ட நீதிமன்றில் இன்று (08) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஒரே அறையில் ஒரு பாதிரியாரையும் இரண்டு பெண்களையும் உள்ளூர்வாசிகள் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.