தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக ஐம்பது மின்சார பஸ்களை பாவனையில் கொண்டு வரும் ஈ பஸ் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் லெசன் அழகிய வண்ண இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிபுரையின் பிரகாரம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வினைத்துடன் மிக்க போக்குவரத்து சேவையினை பொதுமக்களுக்காக வழங்குவதே தமது பிரதான எண்ணமாகும் என்றும் அதற்காக பல வேறு வேலை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயன்படுத்தப்படாமல் இருக்கும் லக்திவ பொறியியல் நிறுவனத்தின் வளங்கள் மூலம் கோடி அளவான பயனை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இதனை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து மின்சார பஸ்களை தயாரிப்பதற்கு இப்பொழுது அமைச்சரவை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி அம்பது பஸ்களுடன் இவ்வேளை திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் வெற்றியுடன் தமது நாட்டின் மின்சார பசுவின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இப்பொழுது நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி மக்கள் தமது கட்டணங்களை பணஅட்டை மூலம் செலுத்தக்கூடிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் இதன்போது பொது மக்களுக்கு கொடுக்கப்படும் சேவைகள் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முந்தைய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை முன்வைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு 13 குழுக்களை நியமிக்கப்பட்டு போக்குவரத்து சட்டத்தில் திருத்தங்களை செய்ய தேவையான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியின் போது நடைபெறும் பல மோசடிகளை தவிர்க்க ஈ மோட்டரின் எனும் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாகன இருக்கும்போது செய்யும்போது அது தொடர்பான தகவல்களை பதிவு செய்யக்கூடிய வகையில் இந்த ஈமோட்டரின் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் இதன் மூலமாக வாகன இறக்குமதி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வரி வருமானம் முழுமையாக கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.