நாட்டில் வணிக மதிப்புள்ள காணிகள் குறித்து புதிய திட்டம்! மக்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகள் குறித்து அரசாங்கத்தின் புதிய திட்டம் தொடர்பாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (21.07.2023) நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் முக்கியமாக கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் வணிக மதிப்புள்ள அரச காணிகள் உள்ளன.

நாட்டில் வணிக மதிப்புள்ள காணிகள் குறித்து புதிய திட்டம்! மக்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை | Commercially Valuable Lands In Sri Lanka

பொருளாதார ரீதியில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையில் புதிய முதலீட்டாளர்களுக்கு அவற்றை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் திருகோணமலை, எல்ல, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட நகரங்களை சுற்றுலா பயணிகளை மேலும் கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பங்களிப்புடன், அப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *