எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துடன் (CPC) அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு போக்குவரத்து திட்டம் மற்றும் விநியோகத்தை மீளாய்வு செய்ததாக அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்தார்.எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்புச் செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், QR ஒதுக்கீடுகள், சேமிப்புத் திறன், மொத்த தானியக்கமாக்கல், பெட்ரோல் நிலையங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் விநியோகம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.