
அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை நிறுத்திவிட்டு அதில் ஏறி குறித்த பெண்ணை சுட்டுள்ளனர்.
இதனை அடுத்து காயமடைந்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
<figure class=”wp-block-image aligncenter size-full is-resized”><a href=”https://chat.whatsapp.com/K10e7iN2O7R0xupGfN6t4O”><img src=”https://onlanka.lk/wp-content/uploads/2023/09/yazh-news-media-sri-lanka.png” alt=”” class=”wp-image-2407″ style=”width:353px;height:77px” width=”353″ height=”77″/></a></figure>